நான் ஒரு உண்மையான கிறிஸ்துவன் ஆவது எப்படி?

TLC Web Team How do I become a Christian?

நான் ஒரு உண்மையான கிறிஸ்துவன் ஆவது எப்படி?

 

நீங்கள் நான் ஒரு நல்லவன் என்று நினைக்கலாம். நல்லவனாக இருக்க முயற்சி செய்யலாம். நான் சரியானதை செய்கிறேன் என்று நினைக்கலாம். உங்கள்  வாழ்வில் நீங்கள் செய்யும் நன்மைகள், தீமையை எல்லாம் மறைந்துவிடுகிறது. ஆனாலும் நீங்கள் வெறுமையாகவும், திருப்தி இல்லாமலும், தனிமையாக இருப்பதாகவும் உணருகிறீர்களா?

 

இந்த உணர்வை திருப்தியாக்க, போதை பொருள், பாலியல் தொடர்பு, பொழுதுபோக்கு விருந்து, இவைகளையெல்லாம் கையாண்டிருக்கலாம். ஆனாலும் உங்கள் வாழ்க்கையில் எதையோ இழந்தவனாகவே உணருகிறீர்களா? இந்த வெறுமையை நிவிர்த்தி செய்ய ஒருவர் இருக்கிறார்–நம் தேவன். உங்கள் வாழ்க்கையை சரிசெய்ய பல முயற்சிகளை நீங்கள் எடுத்திருந்தும் அதனால் பயனில்லையென்றால், அவர்தான் அதற்கு நம் பதில்.

 

இறைவன் நம் வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான கையேடு தந்துள்ளார் –வேதபுத்தகம். அது அவரால் எழுதப்பட்டது மட்டுமல்லாமல், அதில் நம் வாழ்க்கையை எவ்வாறு சந்தோசம், நம்பிக்கை, சமாதானம் கொண்டு வாழ நமக்கு வேண்டிய குறிப்பிடத்தக்க அறிவுரைகளை தந்துள்ளார். நீங்கள் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கும், வெறுமைக்கும், அவர் தான் பதில்.

 

நீங்கள் ஒரு நோக்கத்தோடு இங்கு வந்திருக்கிறீர்கள், தற்செயலாக வரவில்லை. உலகத்தோற்றம் முதலே நம் பாவத்தினால், நாம் கடவுளை விட்டு பிரிக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் தேவன் தமது சொந்த குமாரனாகிய யேசுகிறிஸ்துவை இந்த உலகில் அனுப்பி வைத்து, நம் பாவங்களுக்காக பாடுபட்டு, தண்டனை அனுபவித்து சிலுவையில் அறையுண்டார். மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.

 

இயேசு உங்களை நேசிக்கிறார், உங்களோடு தனிப்பட்ட உறவு கொள்ள விரும்புகிறார், ஆனால் பாவம் நம்மை அவரிடமிருந்து பிரிக்கிறது.

 

  1. நீ தேவனுடைய நியாயத்தீர்ப்புக்கு பாத்திரவனாகிய பாவி என்று ஒப்புக்கொள்:

ரோமர் 3 :23  கூறுவது போல நாம் ஒவ்வொருவரும் பாவிகளாக பிறந்து தேவனுடைய கட்டளைகளை மீறியுள்ளோம். அதன் விளைவாக மனிதன் தேவனிடத்திலிருந்து பிரிக்கப்பட்டு அவருடைய கோபத்திற்கு ஆளானான். நாம் நன்மை செய்வதால் அதிலிருந்து நம்மை காப்பாற்றி கொள்ள முடியாது. ரோமர் 6:23 .

 

  1. இயேசு கிறிஸ்து உங்களுக்காக மறித்து உயிர்த்தெழுந்தார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்:

நாம் பாவிகளும் நரகத்திற்குரியவர்களாக  இருந்தாலும், தேவன் தம் குமாரன், முற்றிலும் மனிதனும் முற்றிலும் தேவனுமாகிய இயேசுவை, நம் பாவங்களின் கடனுக்காக சிலுவையில் மரிக்க அனுப்பினார். அவர் மூன்றாம் நாள் உயித்தெழுந்து நம் பாவங்களின் அறிக்கையை தேவன் அங்கீகரித்ததை நிரூபித்தார்.(1 பேதுரு 3:18;1 கொருந்தியர் 15:5)  

 

  1. உன் பாவத்தை அறிக்கையிட்டு, உன் பாவத்துக்காக இயேசு கிறிஸ்து மறித்து உயிர்த்தெழுந்தார் என்பதை விசுவாசி:

ஒரு மனிதனை ரட்சிக்க, கிறிஸ்து மறித்து உயிர்த்தெழுந்தார் என்று புரிந்து கொண்டால் மட்டும் போதாது. சாதான்கூட, இயேசு தேவனுடைய குமாரன் என்று விசுவாசித்தான். ஆனால் அவன் பரலோகத்துக்கு போவதில்லை.(யாக்கோபு 2 : 14 -25). நீ இரட்சிக்கப்பட, உன் பாவத்திலிருந்து மனப்பூர்வமாக விலகி, மன்னிப்புக்கேட்டு, மனம்திரும்பி,(அப்போஸ்தலர் 26 : 20) இயேசு கிறிஸ்து எனக்காக சிலுவையில் மறித்து உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிக்க வேண்டும்(ரோமர் 10 :9 -10). நீ இவ்வாறு செய்யும்போது, மோட்சம் அடைவதற்கு  இறைவனை சார்ந்து இருக்கின்றாய், உன்னுடைய நற்காரியங்களை அல்ல (தீத்து 3:4-5).

 

ரட்சிப்பு என்பதை நாம் சம்பாதிக்கவும் முடியாது, அதற்கு நாம் தகுதி உள்ளவர்களும் அல்ல. தேவன் தம் இரக்கத்தினால் தகுதியற்ற நமக்கு நித்திய ஜீவனை பரிசாக அளித்தார்.

 

நீ இயேசுவின் மூலமாக நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ள ஆயத்தமாய் இருந்தால் அவரை உன் தேவனாகவும், சொந்த இரட்சகராகவும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வாயானால் இந்த ஜெபத்தை ஏறெடு.

 

“ஏசுவே நான் ஒரு பாவி. நான் நித்திய ஜீவனை அடைந்து பரலோகத்தில் உம்மோடு இருக்க, நீர் என்னுடைய பாவங்களுக்காக மரித்து, உயிர்தெழுந்தீர். நான் என்னுடைய பாவங்களை அறிக்கையிட்டு, என்னுடைய இருதயத்திலும், வாழ்க்கையிலும் நீர் வரும்படியாக கேட்கிறான். என் வாயின் வார்த்தைகள், சிந்தனைகள் செயல்கள் எல்லாவற்றையும் நீர் ஆட்கொள்ளும். நான் என் இரட்சிப்புக்காக உம்மையே நம்பியிருக்கிறேன். நான் உம்மை என் தெய்வமாகவும், இரட்சகராகவும் ஏற்றுக் கொண்டு, நீர் ஈவாக தரும் நித்தியா ஜீவனை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். ஆமென்.”

 

நீங்கள் இந்த ஜெபத்தை ஏறெடுத்து கிறிஸ்துவை ஏற்று கொண்டால், எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நாங்களும் உங்களோடு சேர்ந்து உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுவோம்! உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருந்தால் எங்களை தொலைபேசி மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் வழக்கை பாதையில் யேசுவோடு நீங்கள்  நடக்க நாங்கள் உங்களை உற்சாகப்படுத்துவோம்.